சென்னை
ஆர்.கே.நகரில் காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். காவல்துறை தங்களை மிரட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்று லக்கானியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். தனது ஆதரவாளர்களை காரண மின்றி கைது செய்வது குறித்து தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன். காவல்துறை தவறாக நடந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரு வேன் என்று தமிழக தேர்தல் அதிகாரி லக்கானியை சந்தித்த பிறகு டிடிவி தினகரன் சென்னையின் பேட்டியளித்துள்ளார்.
காவல்துறையின் தவறான செயலுக்கு சென்னை மாநகர ஆணையர்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் டெபாசிட் இழந்து விடுவார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். பி.ஜே.பி. விரும்பும் வேட்பாளர் ஆர்.கே.நகரில் வெற்றி பெற முடியாது. ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மீனவர்களை பார்க்க முதல்வர் பழனிசாமிக்கு பயம் என அவர் விமர்சனம் செய்துள்ளார். காவல்துறை மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன். இரட்டை இலை சின்னம் திருடர்கள் கையில் இருப்பதாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
குமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். குமரி மாவட்டத்தில் புயல் நிவாரண பணிகளை அரசு முடுக்கிவிடவும் இல்லை, முடிக்கவும் இல்லை. மேலும் கன்னியாகுமரியை கேரளாவுடன் இணைக்க வேண்டும் என்று கூறும் அள வுக்கு தமிழகத்தின் நிலை உள்ளது என்று தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்