ஜெயலலிதாவின் முகச்சாயலாம், அண்ணன் மகளாம்.. உடனே தமிழகத்து ரசிக சிகாமணிகள் சின்ன ஜெயலலிதாவாக்கிவிட்டனர் தீபாவை. அவ்வ ளவுதான் பத்திரிகையாளராக இருந்தேன் என பீற்றிக் கொள்ளும் தீபாவின் தலைக்குள்ளும் மமதை குடிகொண்டுவிட்டது. அரசியலில் எத்தனை கோமாளித்தனங்களை செய்ய முடியுமோ அத்தனையையும் அரங்கேற்றிக் கொண்டே இருக்கிறார். ஆனால் காரியத்தில் கண்ணாக இருப்பது போல, இன்னொரு பக்கம் அவருக்கு வர வேண்டியதும் வந்து கொண்டே இருப்பதாக அவருக்கு வலதும் இடதுமாக இருந்தவர்களே குற்றம்சாட்டியும் உள்ளனர்.
அடிமேல் அடிதான்
ஏற்கனவே டூப்ளிகேட் ஜெயலலிதா வேஷம் போட்ட சசிகலா ஜெயிலுக்குப் போனார். இன்னொரு டூப்ளிகேட் ஜெயலலிதாவான கிருஷ்ணப்பிரியாவோ, வருமான வரிசோதனையில் சிக்கினார். 3-வது டூப்ளிகேட் ஜெயலலிதா வேஷம் போட்ட தீபா உஷாராகிக் கொண்டார்.
திடீர் ஒப்பாரி
இதனால் ஆர்கே நகர் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய கடைசி நாளில் கடைசி நேரத்தில் தலைவிரி கோலமாக வந்தார். அத்துடன் அவர் போயிருந்தாலும் பரவாயில்லை. வேட்புமனுவைத் தாக்கல் செய்த கையோடு, என் மனுவை தள்ளுபடி செய்துவிடுவார்கள் என ஒப்பாரி வைத்தார்.
மக்கள் முட்டாள்களாம்
இத்தனைக்கும் கடந்த தேர்தலில் இதே ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்டு பிரசாரம் செய்தவர் இந்த தீபா. இப்போது பல படிவங்களை பூர்த்தி செய்யா மலேயே வேண்டுமென்றே ஒரு கண்துடைப்புக்காக ஒரு வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். இதையும் கூட தமிழக மக்கள் நம்புவார்கள்.. அந்த அளவுக்கு முட்டாள்கள் என அரைவேக்காடு தீபாக்கள் நினைத்து கொண்டிருப்பதுதான் வேதனை.
அவமானத்தின் உச்சம்
வேண்டுமென்றே வேட்புமனுவை முழுமையாக பூர்த்தி செய்யாமல்; தம்முடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருநாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் தீபா. இந்த அரைவேக்காட்டையும் நம்பி அல்லக்கைகளும் ஊடகங்களும் அந்த தீபாவுக்கு பின்னாலேயே ஓடிப் போவதுதான் அவமானத்தின் உச்சம்!
தலைக்கணம்
இதேபோல் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் பதவிகளை பிடித்ததும் முதல்வர் நினைப்பில் மிதக்கிறார் விஷால். அப்படியே முதல்வர் நாற்கா லியை தாரை வார்த்துக் கொடுத்துவிடுவார்கள் தமிழர்கள் என ரொம்பத்தான் கனவு கனவு காண்கிறார்.
போலி கையெழுத்துகள்
இதனால்தான் ஆர்.கே.நகர் வேட்புமனுத் தாக்கலில் போலி கையெழுத்துகளைப் போட்டு மோசடி செய்திருக்கிறார் விஷால். மோசடி செய்ததால் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார். ஆனால் இந்த விஷால் வெளியே வந்து அரசியல் சதி என அளந்துவிடப் போகிறார்..அதையும் கூட தமிழர்கள் ஆவென வாயை பிளந்து பார்த்து கொண்டுதான் நம்புவார்கள் என்பதுதான் உச்சகட்ட அடிமைத்தனம்!
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்