ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தனக்கு விசில் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று நடிகர் விஷால் அனுமதி கேட்டுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் அவைத்தலைவர் மதுசூதனனும் தி.மு.க சார்பில் மருதுகணேஷூம் பா.ஜ.க சார்பில் கரு.நாகராஜனும் சுயேச்சையாக டி.டி.வி. தினகரனும் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் சங்கப் பொதுச் செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் அதிரடியாக அறிவித்து வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார். வேட்புமனுத்தாக்கலுக்கு முன்னதாக காமராஜர், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த விஷால், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்றும் மரியாதை செய்திருந்தார்.
சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கும் விஷால், தனக்கு விசில் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று அனுமதி கோரியுள்ளார். அந்தச் சின்னம் இல்லா விட்டால் படகு, கேரம் போர்டு ஆகிய சின்னங்களை ஒதுக்குமாறு கேட்டுள்ளார். ஏற்கெனவே வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள டி.டி.வி.தினகரன், தனக்கு தொப்பிச் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அவர் கேட்டிருந்த மாற்று சின்னங்கள் பட்டியலில் விசிலும் கிரிக்கெட் பேட்டும் இடம்பெற்றுள்ளன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்