கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கங்கை அமரன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். உப்புச்சத்து குறைபாடு காரணமாக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்து வமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது கங்கை அமரனின் உடல்நலன் தேறி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில், கங்கை அமரனை நேற்று, இசை யமைப்பாளர் தேவா சந்தித்து நலம் விசாரித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பா.ஜ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கங்கை அமரன்.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக, அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது வருகின்ற 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடை த்தேர்தல் நடக்க உள்ளது. இதில், பா.ஜ.க சார்பில் மீண்டும் கங்கை அமரன் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என கங்கை அமரன் மறுத்துவிட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்