ஞாயிறு 04, டிசம்பர் 2022  
img
img

நான் நடித்தால் படம் சொதப்பிவிடும் - விஜய் ஆண்டனி
சனி 02 டிசம்பர் 2017 18:00:29

img
தங்கமுகையதீன்
 
நான் நடிக்க ஆரம்பித்தால் படம் சொதப்பிவிடும் என்றும் நல்ல சினிமாவுக்கு பாடல்கள் அவசியம் இல்லை என்றும் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நிருபர்களிடம் கூறினார்.
 
சின்னபாப்பா பெரிய பாப்பா தொடருக்கு இசையமைப்பாளராக நியமித்த முதலாளி ராதிகா மேடம் அண்ணாதுரை படத்தில் என்னை நடிக்க வைப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாதுரை படத்தின் இயக்குநர் சீனிவாசன் இந்த நாளுக்கா கத்தான் காத்திருந்தார். இந்த நாள் அவருக்கும் அவரது குடும்பத்தாற்கும் சந்தோஷமான நாளாக அமையும். இயக்குநர் சீனிவாசனும் அவரது சகோதரரும் இரட்டையர்கள்தான். படத்தின் நாயகர்களும் இரட்டையர்கள்தான் (அண்ணாதுரை தம்பித்துரை). நான் நடித்த அண்ணாதுரை படம் 400 திரையரங்குகளில் வெளியாகி இருப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. 
 
இரட்டையர்கள் வேடத்தில் நடிக்க தனிப்பயிற்சி எடுத்தீர்களா? என்று என்னிடம் கேட்கிறார்கள். அப்படி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மீசையோடு ஒரு கதாபாத்திரம் மீசை இல்லாமல் வேறு ஒரு கதாபாத்திரம் அவ்வளவுதான். நான் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. நான் நடித்தால் படம் சொதப்பி விடும் என்று நன்றாக தெரியும். கோபப்படவேண்டும் என்றால் விஜய் ஆண்டனி மாதரிதான் கோபப்பட முடியும், அழ வேண்டும் என்றால் விஜய் ஆண்டனி மாதிரிதான் அழ முடியும். விஜய் ஆண்டனி மாதிரிதான் சிரிக்கவும் முடியும்.
 
என்பாணிதான் எனக்குத் தேவை. மற்றவர்களைப் போல் இருக்க என்னால் முடியாது. அதற்கு முயற்சி செய்யவும் மாட்டேன். எப்படி உங்களை வளர்த்துக் கொள்ளப்போகிறீர்கள் என்று கேட்டால், சிவாஜி கமல்ஹாசனைப்போல் என்னால் சத்தியமாக வளர்த்துக் கொள்ள முடியாது. கமலஹாசன் ஜாம்பவான். மலையாளி மாதிரி பேசுவார், பிராமணர்கள் போல் பேசுவார். அவரைப்போல் என்னால் நடிக்க முடியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் கதைக்கு உள்ளே போய் மறைந்து கொள்வேன். இதைத்தாண்டி நீங்கள் முயற்சி செய்ய மாட்டீர்களா? என்றால் முயற்சி செய்ய மாட்டேன். நான் இசையமைப்பாளராக இருந்து சொல்கிறேன்.
 
நல்ல சினிமாவுக்கு பாடல் அவசியம் இல்லை. ஆனால் ரசிகர்கள் பாடலுக்கென்று ஒரு இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அதை மட்டும் கதைக்கு தேவையாக இருந்தால் பாடல்கள் வைத்துக் கொள்கிறேன். எனது பாடல்கள் ரசிகர்களுக்கு தரம் நிறைந்ததாக கிடைக்க வேண்டும் என்பதற்காக எனது சொந்த சைட்டிலிருந்தே பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை செய்திருக்கிறேன். திருட்டுத்தனமாக வெளியிடும் சைட்டு களில் பாடலின் தரம் குறைவாக இருக்கும். அதை கேட்கும் ரசிகர்கள் எனது பாடலை மோசம் என்று நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவே எனது சொந்த சைட்டிலிருந்து இலவசமாக தரமான ஒலிப்பதிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
அதுவும் பாடல் வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் எனது மொத்த பாடல்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு விஜய் ஆண்டனி கூறினார்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img