திங்கள் 02, அக்டோபர் 2023  
img
img

நடிகர் சிம்பு ஏமாற்றியதால் நடுரோட்டுக்கு வந்துவிட்டேன்
சனி 02 டிசம்பர் 2017 17:56:11

img
தங்கமுகையதீன்
 
சென்னை,டிச.2- நடிகர் சிம்பு ஏமாற்றியதால் ரூ.20 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டு நடுரோட்டுக்கு வந்துவிட்டேன் என்று பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
 
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் ஏற்கனவே கோரிப்பாளையம் பட்டத்து யானை போன்ற பல படங்களை தயாரித்தவன். நடிகர் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை தயாரித்தேன். இப்படத்தின் ஒப்பந்தத்தில் இரண்டு மாதங்களில் படத்தை முடிக்க கால்ஷீட் தருகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் அவர் 27 நாட்கள் மட்டுமே நடித்துக் கொடுத்தார். பலமுறை அவரை தொடர்பு கொண்ட போதும் கூட செல்போனை எடுப்பதில்லை. அதனால் அவரது வீட்டுக்குச் சென்றேன்.
 
நான் நடித்துக் கொடுத்ததை வைத்து படத்தை முடித்துவிடுங்கள். இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் முழுவதுமாக நடித்துத்தருகிறேன் என்றார். நானும் முதல்பாகத்தை டூப் நடிகர்களை போட்டு படத்தை முடித்தேன். அந்த படம் சரியாக ஓடவில்லை. அதில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. இரண்டாம் பாகத்தின் படபிடிப்பை தாய்லாந்தில் எடுக்க வேண்டும் என்றார்.
 
 
நானும் படக்குழுவினருடன் தாய்லாந்து சென்று இருபது நாட்கள் தங்கியிருந்து படபிடிப்பு இடங்களை தேர்வு செய்துவிட்டு சிம்புவை அழைத்தோம். அவர் வரமறுத்துவிட்டார். அத்துடன் நான் நடிக்க இரண்டு வருடங்கள் ஆகும் என்று தொலைபேசியில் கூறினார். இதனால் பதறிப்போன நான் படக்குழு வினருடன் சென்னை வந்தோம். இதுவரை எனக்கு ஒப்பந்தப்படி நடித்துத் தரவில்லை. நான் கடன்வாங்கித்தான் படத்தை தயாரித்தேன். எனக்கு பைனான்ஸ் செய்தவர்கள் பணம் கேட்டு என்னை நெருக்கிறார்கள்.
 
இதுவரை எனக்கு ரூ. 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். அவர்கள் எனக்கு நியாயம் வழங்கு வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்புவைப்பற்றி நிருபர்களிடம் தெரிவித்தார்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img