சென்னையில் டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவரும் அரசு ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த செவிலியர் ஜூலிக்கு காவல்துறையினர் அனுமதியளிக்க மறுத்துவிட்டனர்.
தற்போது, தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் கடந்த மூன்று நாள்களாகச் செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செவிலியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்கட்டமாக 200 செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் ஒரு வருடம் கழித்து 1,000 செவி லியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகச் செவி லியர்களின் பிரதிநிதிகள் அறிவித்தனர். இதை ஏற்க செவிலியர்கள் மறுத்துவிட்டனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, இன்று காலை செவிலியர் ஜூலி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக டி.எம்.எஸ் வளாகத்துக்கு வந்தார். அவரைக் காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர். அப்போது, காவலர்களிடம், `நானும் செவிலியர்தான். என்னை அனு மதியுங்கள்' என்று கேட்டுக்கொண்டார். ஆனால், காவல்துறையினர் ஜூலியை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து ஜூலி அங்கிருந்து சென்றுவிட்டார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்