"தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளை 6 மாதத்துக்குள் மூடக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது" என தூத்துக்குடியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பின், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளை 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு வரவேற்கத் தக்கது. தமிழகம் முழுவதும் ஆற்று மணலில் பெரும் கொள்ளை நடைபெற்றுவந்த நிலையில், நிலத்தடி நீர் அதள பாதாளத்துக்கே சென்றுவிட்டது. பல இடங்களில் நிலத்தடி நீர் பொய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் எதிர்காலம் கருதி, பலத்த யோசனைக்குப் பிறகு இத்தீர்ப்பு வந்துள்ளது. ஒரு யூனிட் மணலை ரூ.550 ரூபாய்க்கு வாங்கி, பலருக்கும் கமிஷன் சேர்த்து ரூ.40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையிடு செய்தால், அது மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும். மணல் எடுக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை முழு மனதோடு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கிறார்கள்.
ஆர்.கே.நகரில் ம.தி.மு.க போட்டியிடுவதுகுறித்து, வரும் டிசம்பர் 3-ம் தேதி தாயகத்தில் கூடி முடிவெடுக்கப்படும். மத்திய அரசு, மாநில அரசிடமிருந்து நயவஞ்சகமாகத் திருடும் போக்கில் ஈடுபட்டுள்ளது. நியூட்ரினோ திட்டத்தில், நீதிமன்றத்தில் நான் தடை வாங்கிய நிலையில், இத்திட்டத்தை அமல்ப டுத்தத் தடை இல்லாச் சான்று வழங்க வேண்டும் என மாநில அரசிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. தமிழக அரசின் செயல்பாடு மக்களைக் காக்கும் வகை யில் இல்லை. இத்திட்டத்துக்கு மாநில அரசு தடையில்லாச் சான்று வழங்கிடக் கூடாது. ஜெயலலிதா இருக்கும்போது, அவர் எதிர்த்த திட்டங்கள் அனைத்தையும் தற்போதைய மாநில அரசு ஆதரிக்கிறது. ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா நடக்காமல் பார்த்துக்கொள்வது தேர்தல் ஆணையத்தின் கடமை" என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்