img
img

`செவிலியர்கள் மிரட்டப்படுகிறார்கள்!' - கனிமொழி பகிரங்க குற்றச்சாட்டு
புதன் 29 நவம்பர் 2017 15:48:00

img

டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த தி.மு.க எம்.பி கனிமொழி, `போராட்டத்தில் பங்கேற்றுள்ள செவிலியர்கள், பல்வேறு வகையில் மிரட்டப்படுகிறார்கள்' என்று பகிரங்கக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். 

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 3000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் மூன்று நாள்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களுடன் சுகா தாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டத்தைத் திரும்பப்பெ றுவதாக செவிலியர்கள் அறிவித்தனர். சிலர், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர். ஆனால் ஒரு பிரிவினர், ‘எங்களின் கோரிக்கைகள்குறித்து அரசாணை வெளியிடப்படும்வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்’ என்று கூறி, போராட்டத்தை மூன்றாவது நாளாகத் தொடர்கின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, `பல பெண்கள், குழந்தைகளோடு வந்து போராட்டத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகூட செய்து தரப்படவில்லை. போராட்டத்தில் பங்கேற்றுள்ள செவிலியர்கள், பல்வேறு வகையில் மிரட்டப்பட்டுவருகிறார்கள். வேலை யிலிருந்து தூக்கிவிடுவோம் உள்ளிட்ட பல மிரட்டல்களை செவிலியர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறது ஆளும் அரசு' என்று குற்றம் சாட்டினார்.    

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img