img
img

`பத்மாவதி'-க்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் கறார்!
செவ்வாய் 28 நவம்பர் 2017 15:43:35

img

இந்தித் திரைப்படமான `பத்மாவதி'க்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்தப் படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதைப் போன்ற ஒரு வழக்கை நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், மறுபடியும் பத்மாவதி திரைப்படத்துக்கு தடை கோரி வழக்கு போடப்பட்டது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் புனைவுத் திரைப்படம், 'பத்மாவதி.' ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம். இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனேவும் ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். 

படப்பிடிப்பு தொடங்கியது முதலே ராஜபுத்திர சமூக மக்கள், `பத்மாவதி'க்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பு, படத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறி, தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது. 'பத்மாவதி' திரைப்ப டம், டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பத்மாவதி படத்தின் ரிலீஸைத் தாங்களாக முன்வந்து தள்ளி வைப்பதாகத் தயாரிப்பு நிறுவனமான வையாகாம் 18 (Viacom18) அறிவித்துள்ளது. இதையொட்டி, பத்மாவதிக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், தணிக்கை வாரியம் இன்னும் பத்மாவதி திரைபடத்துக்குச் சான்றிதழ் கொடுக்கவில்லை. இந்நிலையில், அரசுப் பதவி யில் இருப்பவர்கள் தணிக்கை வாரியம் இந்தப் படத்துக்குச் சான்றிதழ் வழங்க வேண்டும் அல்லது கூடாது என்று எப்படி சொல்ல முடியும். இது தணிக்கை வாரியத்தின் முடிவில் தலையிடுவது போன்றது' என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img