சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. 'குடும்ப உறவுகளின் எதிர்ப்பை அடுத்து, போட்டியிடுவதுகுறித்து ஆலோசித்து வருகிறார் தினகரன். அவருக்குப் பதிலாக கட்சி நிர்வாகிகளில் ஒருவரைப் போட்டியிட வைக்கும் வேலைகள் நடந்துவருகின்றன' என்கின்றனர் சசிகலா உறவுகள்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் ஆதரவாளர் ஒருவரைக் களமிறக்கும் வேலைகள் நடந்துவருகின்றன. "வடசென்னைப் பகு தியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரை களமிறக்கத் திட்டமிட்டுள்ளனர்" என விவரித்த சசிகலா உறவினர் ஒருவர், "இடைத்தேர்தலில் மீண்டும் தினகரன் களமிறங்கலாம் என்பதை உணர்ந்துதான், வருமான வரித்துறை சோதனை தீவிரமடைந்தது.
சசிகலா உறவுகளிடம் கைப்பற்றப்பட்ட பணத்தை வைத்தே வளையத்தை இறுக்கும் முடிவில் இருக்கிறது வருமான வரித்துறை. இதை சசிகலாவின் கவனத்துக்கும் சிலர் கொண்டு சென்றுள்ளனர். 'களத்தில் இருந்து தினகரன் விலகியாக வேண்டும்' என்பதில் மத்தியில் உள்ளவர்கள் உறுதியாக உள்ள னர். எனவே, 'போட்டியிட வேண்டாம்' எனத் தகவல் சொல்லி அனுப்பினார் சசிகலா. அவரது வார்த்தைகளுக்கு தினகரன் செவிமடுப்பாரா என்பதெல்லாம் போகப் போகத் தெரியும்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்