ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க என பிரதான போட்டியாளர்களோடு தனித்துக் களம் காண்கிறார் ஜெ.தீபா. ' தொகுதி முழுக்க ஏரா ளமான பிரச்னைகள் இருக்கின்றன. இப்போதே மக்கள் என்னிடம் புகார் மனுக்களைக் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்' என்கிறார் இயல்பாக.
அ.தி.மு.க சார்பில் ஆர்.கே.நகரில் களம் இறங்கும் வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. தி.மு.க சார்பில் ஏற்கனவே களத்தில் நின்ற மருது கணேஷுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சி கள் ஆதரவளித்துள்ளன. இரட்டை இலைக்கு எதிராக டி.டி.வி.தினகரனும் போட்டியிடுகிறார். இந்நிலையில், ' ஆர்.கே.நகர் தேர்தலில் கட்டாயம் போட்டி யிடுவேன்' என அறிவித்திருக்கிறார் ஜெ.தீபா.
அவரிடம் பேசினோம். “ ஆர்.கே.நகரில் ஏற்கனவே தீவிரமாக பிரசாரம் செய்திருக்கிறேன். அதேபோல், இந்தமுறையும் தீவிர பிரசாரம் செய்வேன். ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் என்னிடம் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். அண்மையில் பெய்த மழையால் அங்கு சாலைகள் மோசமான நிலையில் இருக்கின்றன. அந்தநேரத்தில், நான் ஊரில் இல்லை. அதனால் என்னுடைய பேரவைத் தொண்டர்கள் சிலர் அங்கு சென்று மக்களுக்கு உதவினர். இதுபோன்று ஏராளமான பிரச்னைகள் அங்கு நிலவுகிறது. அனைத்தையும் சரி செய்வேன்" என்றார் உறுதியாக.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்