"நான்தான் ஜெ-வின் உண்மையான மகள். அதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கும் தயார்'' என்று பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மனு செய்தும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தும் பரபரப்பைக் கிளப்பியிருந்தார் அம்ருதா (எ) மஞ்சு. இப்போது, அவர் பெங்களூரு - மைசூரு செல்லும் வழியில் கெங்கேரி அடுத்துள்ள சூலிகேரி கிராமம் ராமச்சந்திர சர்க்கலில் குடியிருக்கிறார்.
யார் இந்த அம்ருதா?
2014-ம் ஆண்டு ஜெ. பெங்களூரு சிறையில் இருந்தபோது, "நான்தான் ஜெ-வின் தங்கை'' என்று பெங்களூ ருவாசிகளிடமும், பத்திரிகையாளர்களிடமும் சொல்லிப் பரபரப்பைக் கிளப்பியவர் சைலஜா. இவருடைய மகள்தான் இந்த அம்ருதா என்ற மஞ்சு. தற்போது இவர்தான், ''நான்தான் ஜெ-வின் மகள்'' என்று உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளார்.
டி.என்.ஏ. பரிசோதனை
இதுதொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில், ''1980 ஆகஸ்ட் 14-ம் தேதி ஜெ. - சோபன்பாபு இணையருக்குப் பிறந்ததாகவும், ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி என்பவர் பிரசவம் பார்த்தார் எனவும், ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், இந்த உண்மையை வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதன்பின் ஜெ., தனது சகோதரி சைலஜாவிடம் தன்னை ஒப்படைத்து வளர்க்கச் சொன்னதாகவும் அதில் குறிப்பிட்டிருக்கும் மஞ்சு, தன்னை சைலஜா - சாரதி தம்பதியினர் சொந்த மகளாகவே வளர்த்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
என்னை வளர்த்த தாய் சைலஜாவும் கடந்த ஆண்டு காலமாகிவிட்டார். அடுத்த சில மாதங்களில் ஜெயலலிதாவும் காலமானார். நான் ஜெயலலிதாவின் வாரிசு. தனக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளேன். அதில், வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி எனது அம்மா ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்யவேண்டும்'' என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
அம்ருதா வீடு!
இந்த மனு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. நீதிபதி மதன் பி லோகூர் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை ஆய்வு செய்தது. அப்போது, அம்ருதாவின் மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்று கூறிய நீதிபதி மதன் பி லோகூர் தலைமையிலான அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அத்துடன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது. எனவே, அம்ருதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விரைவில் மனுத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே ஜெ-வுக்கு ஒரு மகள் இருக்கிறார் என்ற சர்ச்சையும் இருந்துவந்தது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ப்ரியா மகாலட்சுமி என்பவர் தன்னை ஜெ. மகள் என்று சொல்லி, பின்னர் பண மோசடி உள்ளிட்ட பல வழக்கு களில் சிக்கிச் சிறை சென்றார். இதுதவிர, ஜெ. இறந்தபிறகு, "நான் ஜெ-வின் மகன்'' என ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் நீதிமன்றம் செல்ல, போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், ஜெ-வின் மகள் என்று அம்ருதா உச்ச நீதிமன்றத்தை நாடுவது இதுவே முதல் முறை.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்