தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் காலேஜ்விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் அருணாதேவி. இவர், பொம்மையக் கவுண்டன்பட்டி பஜார் தெருவைச் சேர்ந்த அன்னக்கொடி − செல்வி இவர்களின் மகனான கோபாலகிருஷ்ணன் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தற்போது வேறொரு திருமணம் செய்ய இருப்பதாகத் தேனி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்தார்.
"நானும் கோபாலகிருஷ்ணனும் கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்தோம். 2013-ம் ஆண்டு கைலாசநாதர் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். பின்னர், தாமரைக்குளத்தில் உள்ள காலேஜ்விலக்கு பகுதியில் வீடு ஒன்றை ஒத்திக்கு எடுத்து வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் அவரின் அம்மா, அப்பாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வேறொரு திருமணம் செய்ய தயாராகிவிட்டார். நாளை மறுநாள் பி.டி.பட்டியில் இருக்கும் சந்திரபாண்டியன் திருமண மகாலில் திருமணம் நடக்கயிருக்கிறது. என் கணவர் என்னை ஏமாற்றிவிட்டு வேறு கல்யாணம் செய்யப்போகிறார். இது சட்டப்படி செல்லாது. மேலும் எனக்கு நியாயம் வேண்டும் என்பதால் எஸ்.பி.யைச் சந்தித்து முறையிட வந்தேன்" என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்