சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க உயர்மட்டக்குழு கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழுவில் காலியாக இருக்கும் 2 இடங்களுக்குப் புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக இன்றையக் கூட்டத்தில் அ.தி.மு.க-வினர் ஆலோசித்தனர். அப்போது ஒரு தரப்பினர் காலி இடங்களுக்குப் புதிய உறுப்பினர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இடைமறித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இருதரப்பிடமும் பேசி சமாதானம் செய்ய முயன்றார். முதல்வர் தலையீட்டால் சலசலப்பு ஓய்ந்தது.
இதையடுத்து நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழுவில் புதிதாக நான்கு பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. அதாவது, ஏழு பேர் கொண்ட அ.தி.மு.க ஆட்சி மன்றக்குழு 9 பேர் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள உறுப்பினர்களான ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால் எம்.பி, ஆகியோருடன் புதிதாகக் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், வளர்மதி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆட்சிமன்றக் குழு பற்றிய இந்த அறிவிப்பால் ஒரு தரப்பினர் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆட்சிமன்றக் குழுவில் 6 பேர் எடப்பாடி அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்