தமிழகம் முழுவதும் பல இடங்களில், நியாயவிலைக் கடையில் சர்க்கரை விலை ஏற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தி.மு.க-வினர் இன்று போராட்டம் நடத்திவருகின்றனர். மதுரையில், தி.மு.க மாவட்டச் செயலாளர் மூர்த்தி, பி.டி.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ, உள்ளிட்டோர் தலைமையில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதுதொடர்பாக, இன்று காலை 8:30 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தத் தகவல் முதல்வர் வட்டாரங்களுக்குத் தெரியவந்துள்ளது. அதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜுக்குப் போன்செய்து, நீங்கள் பத்திரிகையாளர்களை இதுதொடர்பாக சந்திக்க வேண்டாம். உங்கள் பேச்சு பரபரப்பையும் புகைச்சலையும் ஏற்படுத்திவிடும். இது, தி.மு.க-வின் போராட்டத்துக்கு நாம் விளம்பரம் தேடிக்கொடுத்ததுபோலஆகிவிடும்'' என கடுமையாகத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, உடனடியாக செல்லூர் ராஜு பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் தூத்துக்குடிக்கு கிளம்பிவிட்டதாக, செல்லூர் ராஜுவின் மிகவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்