ஜெயலலிதா மரணம்குறித்து விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, முதல்வர், துணை முதல்வர், சசிகலா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்ற ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் அணி ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இரு அணிகள் இணைப்புக்கு முன்னர் ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தனிநபர் விசாரணை ஆணையத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார்.
ஜெயலலிதா மரணம் குறித்த விவரங்கள் இருந்தால் ஆணையத்திடம் பிரமாணப்பத்திரமாகவோ, புகார் மனுவாகவோ தாக்கல்செய்யலாம் என்று ஆறுமுகசாமி அறிவித்தார். அதன்படி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன், ஜெ.தீபாவின் கணவர் மாதவன் உள்பட70 பேர் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பிரமாணப்பத்திரம் தாக்கல்செய்தனர். பிரமாணப்பத்திரம், புகார் மனுக்கள் அளித்தவரிடம் இன்று முதல் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று விசாரணை தொடங்கியது. தி.மு.க.வைச் சேர்ந்த சரவணன் ஆணையத்திடம் நேரில் ஆஜரானார். அப்போது அவர் கூடுதல் ஆவணங்களைக் கொண்டுவந்திருந்தார்.
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, “ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் நாளை விசாரணை நடத்தப்படும்” என்றார். முதல்வர், துணை முதல்வர், சசிகலா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த ஆறு முகசாமி, “அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும்” என்றார். அவருடைய இந்தப் பதிலால் மேற்கண்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்