முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதாநிலையம் இல்லத்தை தினகரன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.
ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவுதினம் வரும் டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இந்தநிலையில், ஜெயலலிதா இல்லத்தில் பூஜை நடத்த புரோகிதர்களுடன் தினகரன் ஆதரவாளர்கள் சென்றனர். ஆனால், இந்த தகவல் முன்கூட்டியே தெரிந்ததை அடுத்து போயஸ் கார்டன் இல்லத்துக்கு முன்பாக போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, புரோகிதர்களுடன் போயஸ் கார்டன் இல்லத்துக்கு தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், கலைராஜன் உள்ளிட்டோர் வந்தனர். அவர்களை வேதாநிலையம் இல்லத்துக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால், அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் மற்றும் கலைராஜன் ஆகியோர் கூறுகையில், ‘ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் மாதந்தோறும் பூஜை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த மாதம் அந்த பூஜையை நடத்த போலீஸார் அனுமதிக்கவில்லை.
வருமான வரித்துறை சோதனை தங்கள் கையில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கூறியது. ஆனால், இன்றைய நிலவரங்களைப் பார்க்கும்போது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படியே போலீஸார் எங்களை போயஸ் கார்டன் இல்லத்துக்குள் அனுமதிக்கவில்லை. பூஜை நடத்துவதற்காக புரோகிதர்களை மட்டுமாவது வீட்டுக்குள் அனுமதிக்கக் கோரினோம். ஆனால், அந்த கோரிக்கையையும் போலீஸார் நிராகரித்துவிட்டனர்’ என்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்