உத்தரப்பிரதேசத்தில் யோகி பங்கேற்ற பேரணியில், தேசியக் கொடிக்கு மேல் பாரதிய ஜனதா கொடி பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி, காசியாபாத் ராம்லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது. அதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். யோகி வருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன், அந்தக் கட்டடத்தின் உச்சியில் தேசியக்கொடிக்கு மேல் பாரதிய ஜனதா கட்சியின் கொடி பறந்துகொண்டிருந்தது.
அதைப் பார்த்த பத்திரிகையாளர்களும் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். தேசியக்கொடி மரியாதைச் சட்டத்தின்படி, தேசியக்கொடிக்கு மேலாக எந்தக் கொடியும் பறக்கக்கூடாது. பக்கவாட்டில்கூட கொடி பறக்கக்கூடாது. அதிகாரிகள் அறிவுறுத்தியதையடுத்து, அவசரம் அவசரமாக பாரதிய ஜனதா கட்சியின் கொடியை இறக்கவைத்தனர். எனினும், தேசியக் கொடிக்கு மேல் பாரதிய ஜனதா கொடி பறப்பதை சிலர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸில் எந்தப் புகாரும் செய்யப்படவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசப்பற்றுகுறித்துப் பேசும் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களே... தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளலாமா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்