பெங்களூர்: கொலை மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுபவன் நான் இல்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போகிறார், கமல் ஹாஸனோ வந்துவிட்டேன் என்கிறார். இந்நிலையில் திரைப்பட நடிகர்கள் தலைவரானால் நாட்டிற்கு பேரழிவு என்று பேட்டி அளித்துள்ளார் பிரகாஷ் ராஜ். ரஜினி, கமல் கட்சி துவங்கினாலும் சேர மாட்டேன் என்று கூறியுள்ளார்.
எந்த அரசியல் தொடர்பும் இல்லாமல் மக்களுக்காக குரல் கொடுக்கவே விரும்புகிறேன். பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் ஸ்டார்கள் அரசியலுக்கு வந்த பிறகு அதிருப்தி அடைவார்கள் என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
என் அம்மா ஒரு கிறிஸ்தவர், மனைவி இந்து, மேனேஜர் முஸ்லீம் என்று என்னை யாரும் அடையாளம் சொல்வதை விரும்பவில்லை. மதத்தை வைத்து அல்ல மாறாக வேலையை வைத்து அடையாளம் காண்பது நல்லது என்கிறார் பிரகாஷ் ராஜ்.
நாட்டுப் பற்றை காட்ட தியேட்டர்களில் தேசிய கீதம் ஓடும்போது எழுந்து நிற்கத் தேவையில்லை என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். அவரின் வெளிப்படையான பேச்சு பலரை அதிர வைத்துள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்கு கொலை மிரட்டல் வருவது, சமூக வலைதளங்களில் மக்கள் கலாய்ப்பது குறித்து பிரகாஷ் ராஜிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், இதுக்கு எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்