ராமேஸ்வரம் மீனவர்கள்மீது இந்திய கடலோரக் காவல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புயல்கால சேமிப்பு நிவாரண நிதியைப் படகு உரிமையாளர்களுக்கு வழங்காமல் நிறுத்தியதைக் கண்டித்தும் இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் கடந்த 5 நாள்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் புயல் கால சேமிப்பு நிவாரண நிதியை அனைத்து மீனவர்களுக்கும் பெற்றுத்தர அமைச்சர் மணிகண்டன் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மீனவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதைத் தொடர்ந்து 5 நாள்களுக்குப் பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக இன்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குள் சென்றனர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள்மீது இந்திய கடலோரக் காவல் படையினர் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தித் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் பிச்சை என்ற மீனவர் காயமடைந்த நிலையில் அந்தப் படகைச் சுற்றி வளைத்த இந்திய கடலோரக் காவல் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். பின்னர், இந்திய கடல் பகுதியில் வைத்து, துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான படகில் இருந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காயம் அடைந்த மீனவர் கரைக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை இலங்கைக் கடற்படையினரே இந்திய மீனவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வந்த நிலையில் தற்போது இந்திய கடற்படையினரே நம் மீனவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்