ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக்கை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
சென்னை: ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமனை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள இல்லத்தில் 5 நாட்களாக நடைபெற்று வந்த சோதனையை அடுத்து விவேக்கை வருமானவரித்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
ரூ. 1000 கோடி மதிப்புடைய ஜாஸ் சினிமா:
சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் கட்டுப்பாட்டில் ஜாஸ் சினிமா கம்பெனி இயங்கி வருகிறது. மேலும் ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர்.நாளிதழ் விவேக் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 27-வயதான விவேக்குக்கு ஏராளமான சொத்து வந்தது எப்படி என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையின் மையப்புள்ளி விவேக்:
தமிழகம் முழுவதும் நடந்த வருமானவரி சோதனையில் விவேக் தான் மையப்புள்ளி. ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையைப் சசிகலா அண்ணன் மகன் விவேக் பெற்று இருந்தார். ஜெயலலிதா, சசிகலாவின் பினாமி சொத்து விவரம் பற்றி விவேக்கிடம் அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
ஐ.டி. அலுவலகத்தில் விவேக்:
சென்னை வருமானவரி புலனாய்வு அலுவலகத்தில் விவேக்கிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விவேக் வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் பற்றி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை சத்யம் சினிமாஸிடமிருந்து வாங்கியது எப்படி? என்றும் 27 வயதான விவேக்குக்கு கோடிக்கணக்கில் சொத்து வந்தது எப்படி என்றும் அதிகாரிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்