img
img

கதாயுதம்    
திங்கள் 13 நவம்பர் 2017 12:25:55

img
விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற “ரம்மி“ படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன். தான் இயக்கும் அடுத்த படத்திற்கு “கதாயுதம்“ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. ரம்மி படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்நிறுவனம் தாயரிக்கும் படம் இது.
 
ஜோக்கர் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக கவனிக்கப்பட்டவர் குருசோமசுந்தரம்.  துருவங்கள் 16 படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வந்தவர் ரகுமான். இந்த இருவரும் “கதாயுதம்“ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக இந்திய பாக்கிஸ்தான் படத்தின் நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட், துளசி, ரமா, பாரதிகண்ணன் ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் பாலகிருஷ்ணன். ரம்மி படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த படத்தை இயக்குகிறார். தயாரிப்பு ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ.    
                                                                                     
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது... வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கும் அப்படி கனவுகளோடு இருக்கிற இரண்டு பேர் சந்திக்கிறதும், அவங்க கனவு நிறைவேற போராடுறதும் தான் கதை. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படபிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் பாலகிருஷ்ணன்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img