அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில், தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குரு உட்சத்துல இருக்காரு'. குரு ஜீவா கதா நாயகனாகவும் பைசா திரைப்படத்தில் நடித்த ஆரா கதா நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில், பாண்டியராஜன், MS பாஸ்கர், நமோ நாராயணன், இமான் அண்ணாச்சி, மனோ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
குரு உட்சத்துல இருக்காரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் சினேகன் வருகை தந்திருந்தனர்.
இவர்கள் முன்னிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இயக்குநரை, தயாரிப்பாளரை, படத்தில் பணிபுரிந்த கலைஞர்களை பாராட்டி படம் வெற்றி பெற வாழ்த்தினார்கள். குரு உச்சத்தில இருக்காரு திரைப்படத்திற்கு இசையமைத்த தாஜ் நூர், இதில் வேலை பார்த்தது தனக்கு ஒரு புது அனுபவத்தை தந்ததாகவும், பாடல் காட்சிகள் படப்பிடிப்புகள் முடிந்த பின்னால் இசையமைத்தது சவாலாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அவருக்கு பின்னால் பேசிய பிக் பாஸ் புகழ் சினேகன், "குரு உட்சத்துல இருக்காரு திரைப்படத்திற்கு ஒரு பிரோமோ பாடல் எழுத சொன்னார்கள், தாஜ் நூர் இசையை கேட்ட பின்னல் வந்த பாடல் தான் 'ஆசை தான்'." தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார் சினேகன். அந்த பாடலுக்கும் காட்சியமைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அந்த திரைப்படத்தின் கதாநாயகன் குரு ஜீவா, திரைப்படத்தை ஆதரித்து தன்னை ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொள்ளுமாறு பணிவோடு கேட்டுக்கொண்டார். திரைப்படத்தின் இயக்குநர் தண்டபாணி வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் அவரின் தயாரிப்பாளர், சக தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் குரு உட்சத்துல இருக்காரு திரைப்படத்தில் நடித்திருக்கும் பாண்டியராஜன், MS பாஸ்கர், இமான் அண்ணாச்சி, நமோ நாராயணன் என எல்லா கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
அபிராமி ராமநாதன் பேசிய பொது, "தற்போது பார்த்த டிரைலர் மிகவும் நன்றாக இருந்தது. அறிமுக இயக்குனரின் வேலையை போல இல்லாமல் அனுபவம் நிறைந்த ஒரு இயக்குனரின் திரைப்பட டிரைலர் போல இருந்தது. இந்த படத்தை தன் மகனுக்காக தயாரித்த தன சண்முகமணியை முதலில் பாராட்ட விரும்புகிறேன். பொதுவாக படத்தில் நடிக்கிறேன் என நம் வீட்டு பிள்ளைகள் சொன்னால் கண்டிப்பதும் அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எரிவதற்கும் தான் பெற்றோர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் இவர் தன் மகனை நடிகனாக அனுமதித்தது மட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தை தயாரிக்கவும் செய்திருப்பது பாராட்டுக்கூறியது. இந்த படத்தின் ஒளிப்பதிவும் அற்புதமாக இருக்கிறது." இந்த திரைப்படம் வெற்றியடைய அபிராமி ராமநாதன் வாழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த நடிகர் விஜய் வசந்த், நடிகர் ஆரி மற்றும் பின்னணி பாடகர் வேல் முருகன் படம் வெற்றி பெற வாழ்த்தினார்கள். சினேகன், பா. விஜய் மற்றும் மீனாட்சி சுந்தரம் இந்த திரைப்படத்தின் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்கள்.