img
img

நாட்டைச் சர்வாதிகார பாதைக்கு மோடி கொண்டு செல்கிறார்!
புதன் 08 நவம்பர் 2017 16:14:47

img

பிரதமர் நரேந்திரமோடி இந்திய நாட்டைச் சர்வாதிகார பாதைக்குக் கொண்டுசெல்கிறார் எனக் குற்றம்சாட்டினார் துரைமுருகன்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜெகத்ரட்சகன்,“பண மதிப்பிழப்பைக் கண்டித்து நடக்கும் இந்த ஆர்ப்பாட்டம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்கிறது. திமுக ஆட்சி மீண்டும் மலர இந்த ஆர்ப்பாட்டம் முன்னோடியாக இருக்கும்”என முடித்தார். அடுத்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனைப் பெற்ற விஜய் மல்லையாவை மோடியால் பிடிக்க முடியவில்லை. ஆனால், ஒரே ராத்திரியில் பல்லாயிரக்கணக்கான மக்களை நெருக்கடிக்குள்ளாகி, பண மதிப்பிழக்கம் செய்தது மிக மோசமான நடவடிக்கை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அருண் ஜெட்லி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது” என்றார்.

இறுதியாகப் பேசிய துரைமுருகன், “அகில இந்திய அளவில் பி.ஜே.பி அல்லாத எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, இந்தத் தினத்தை கறுப்பு தினமாக அனுசரிக்க முடிவெடுக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டார். இந்தத் தினத்தை அனுசரிப்பதில் தி.மு.கவுக்கு முழுப்பொறுப்பு உண்டு. சுதந்திரம் பெற்ற பின்பு பண மதிப்பிழப்பு பிரச்னை இல்லை. ரூபாய் நோட்டுகள் செல்லாது எனத் திடீரென ஒருநாள் இரவு அறிவித்தபோது நாடே ஸ்தம்பித்துப் போனது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லுகிற அதிகாரம் மோடிக்கு இல்லை.

காரணம் மோடிக்கு இதுதான் நோட்டு என்று சொல்லுகிற அதிகாரம் இல்லை. ரூபாய் நோட்டுத் தாளில் i promise to pay the bearer of sum of rupees என நோட்டில் ரிசர்வ் பேங்க் ஆளுநர் கையழுத்திட்டிருக்கிறார். ஆகவே செல்லாது எனச் சொல்ல மோடிக்கு அதிகாரம் ஏது.? அமைச்சர்கள் செக்கில் கையெழுத்து இட முடியாது. நிதிச் செயலாளர் மட்டுமே செக்கில் கையெழுத்திடும் அதிகாரம் உண்டு. ஆனால் அந்த ஆளுநருக்கே தெரியாமல், அவரைக் கேட்காமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நீதிமன்றம் மோடி அரசின் நடவடிக்கை செல்லாது எனச் சொல்லியிருக்க வேண்டும். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு ராஜினாமா செய்துவிட்டார். எதற்காகச் செல்லாது எனச் சொன்ன காரணம் கறுப்புப் பணம் ஒழிக்க என்று கூறப்பட்டதே. அதைச் செய்தீர்களா. கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைத்திருந்த பண முதலைகள் முன்பே மாற்றிவிட்டனர். இதில் ஏழை மக்கள்தான் அவதிப்பட்டனர்.

நாட்டில் பண முடக்கம் ஏற்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் முடங்கியுள்ளது. நிலம் விற்றால் வரி, வாங்கினால் வரி. 15 லட்சம் சொந்தப் பணத்தை எடுக்கக் காரணம் சொல்ல வேண்டும். நாடுமுழுவதும் சிறு தொழில் முடங்கி விட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது மோடி, ஒவ்வொ ருவர் வங்கி கணக்கிலும் 15லட்சம் செலுத்துவேன் எனச் சொன்னாரே. அதை ஏன் செய்யவில்லை. இது ஜனநாயக நாடு. இந்த நாட்டில் பத்துபேரை கேட்டுத் தான் முடிவெடுத்திருக்க வேண்டும். சர்வாதிகாரத்துக்கு நாட்டை மோடி இட்டுச் செல்கிறார். மோடி அவர்களே நீங்கள் ஏதோ செய்ய நினைக்கிறீர்கள். அவசரப்பட வேண்டாம் .

நீங்கள் பாராளுமன்றத்துக்கு வருவதும் பேசுவதும் இல்லை. இந்தப் பிரதமரால் பொருளாதாரம் முடக்கப்பட்டது. பங்குச் சந்தை முடங்கியிருக்கிறது. எனவே தான் இந்த நாளைக் கருப்பு தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப் படுகிறது. இனி மேலாவது பாராளுமன்றத்தை கலந்தாலோசிக்க வேண்டும். இல்லையெனில் இந்த நாடு சர்வாதிகார நாடாக மாறி விடும்” என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img