கார்ட்டூனிஸ்டுகள், சமூகப் போராளிகளைக் கைது செய்வது, மாறுபட்ட கருத்து கொண்ட மக்கள் மீது அடக்குமுறையைக் கையாள்வது போன்றவை பயம் கொள்ள வைக்கின்றன என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
கந்துவட்டிக் கொடுமையை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா நவம்பர் 5-ம் தேதி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு பலரும் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: