பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை, நாளை உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்பட உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் சிறையிலிருந்தார். இந்த நிலையில், தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அதனால், தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தார். அவரது கோரிக்கையைப் பரிசீலனைசெய்த தமிழக அரசு, நிபந்தனையுடன் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் விடுவித்தது. இதையடுத்து, தந்தை குயில்தாசனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், பரோலை நீட்டிக்கக்கோரி தமிழக அரசுக்கு பேரறிவாளன் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கியது.
அதன் பின்னர், பரோல் நிறைவடைந்து மீண்டும் சிறைக்குத் திரும்பினார் பேரறிவாளன். இந்த வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைமீதான இறுதிக்கட்ட விசாரணை, நாளை உச்ச நீதிமன்றத்துக்கு வருகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்