'என்னுடைய கந்துவட்டிப் புகாருக்கு போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதைவிட வேறுவழியில்லை' என்று கண்ணீர்மல்க சீரியல் துணை நடிகை ஆனந்தி தெரிவித்தார்.
கந்துவட்டித் தொடர்பான புகார்கள் சில நாள்களாகக் காவல்நிலையங்களின் வாசல்களைத் அதிகமாகத் தட்டத் தொடங்கியுள்ளன. கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்களின் செய்திகளும் மீடியாக்களில் அதிகமாக இடம்பெறுகின்றன. தனியார் தொலைக்காட்சிகளிலும் கந்துவட்டி விவாதிக்கப்படு கின்றன. கந்துவட்டியால் என் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளதாக சீரியல் துணை நடிகை ஆனந்தி, இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார்.
"என்னுடைய தந்தை ஆறுமுகத்தின் மருத்துவச் செலவுக்காக அம்மாவின் தங்கை ரங்கநாயகியிடம் கடந்த 2014-ம் ஆண்டில் 5 லட்சம் ரூபாய் வரை வட்டிக்கு வாங்கினேன். வட்டிப் பணத்தை மாதந்தோறும் செலுத்தினேன். கடந்த சில மாதங்களாக எனக்கு சீரியலில் வாய்ப்புக்கள் இல்லை. இதனால், பண நெருக்கடியால் சிரமப்பட்டேன். வட்டிக்குப் பணம் கொடுக்காததால் சித்தி ரங்கநாயகி மற்றும் அவரின் உறவினர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் மன உளைச்சலுக்குத் தள்ளப்பட்டேன். இந்தச் சமயத்தில் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பிறகு, வேலூர் எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தேன். அங்கேயும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
போலீஸில் புகார் கொடுத்ததால் எனக்கு மிரட்டல்கள் வந்தன. இந்தச் சமயத்தில் என்னிடமிருந்த செக்குகளைப் பிடுங்கி, அதில் 31 லட்சம் ரூபாய் தொகையை நிரப்பி வங்கியில் செலுத்தினர். பணமில்லாததால் செக் திரும்ப வந்தது. இதனால் வேலூர் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு நடந்து வருகிறது. 5 லட்சம் ரூபாய் கடனுக்கு 31 லட்சம் ரூபாய் என ஏமாற்றி, செக் மோசடி வழக்கு தொடர்ந்ததால் மன உளைச்சலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன். நான் மட்டுமல்ல, என்னுடைய குடும்பமே ரங்கநாயகி மற்றும் அவர் குடும்பத்தினரிடம் கந்துவட்டியால் சிக்கித் தவிக்கிறது. என்னுடைய சகோதரிகள் அனிதா, அனிஷியா ஆகியோரும் ரங்கநாயகியிடம் வட்டிக்குப் பணம் வாங்கியுள்ளனர். அவர்களுக்கும் ரங்கநாயகி நெருக்கடி கொடுத்துவருகிறார்.
இதற்கிடையில் என் அண்ணன் அருண்குமாரும் வட்டி டார்ச்சரால் பாதிக்கப்பட்டார். அவர், 2016, டிசம்பர் 19-ல் விபத்தில் சிக்கி இறந்தார். அவர் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, ராணிப்பேட்டையில் உள்ள 60 லட்சம் மதிப்புள்ள வீட்டை அபகரிக்க ரங்கநாயகி முயற்சிசெய்து வருகிறார். என்னுடைய அம்மா சரசாவிடம் ரங்கநாயகி தரப்பு மிரட்டியுள்ளது. ஒட்டுமொத்த குடும்பமே சித்தியிடம் சிக்கித் தவித்துவருகிறது. என்னுடைய புகாருக்கு போலீஸார், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றார் கண்ணீருடன்.
"நடிகை ஆனந்தி புகார் தொடர்பாக என்னுடைய கவனத்துக்கு எந்தத் தகவலும் வரவில்லை. ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் விசாரித்துவிட்டு போலீஸார் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் வேலூர் போலீஸ் எஸ்.பி பகவலன்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்