கமல்ஹாசன் ஆனந்த விகடனில் எழுதிவரும் `என்னுள் மையம் கொண்ட புயல்' தொடரில், ‘ இனியும் தாமதியாது கூடுவோம். பட்டிமன்றம் போட்டுப் பேச அல்ல; செயல் திட்டங்கள் தீட்ட. திட்டங்களுடன் நான் கூட்ட நினைப்பது வெறும் தொண்டர் கூட்டத்தை மட்டுமல்ல; தலைவர்களின் பெருங்குழுவை.
இதை ஒரு தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் இப்போதே தயவுசெய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். தியாகமாக நினைத்து வருபவர்கள் எதையோ இதற்காக இழப்பது போன்ற உணர்வுடன் வந்து எம்மைத் தேவையில்லாமல் கடன்படச் செய்வார்கள். தமிழகத்துக்குச் செய்ய வேண்டிய கடமையாக நினைத்து வருபவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். செய்வார்கள் எனக் காத்திருந்தது போதும். நம்மால் முடியும், என்னால் முடியும். என்னால் முடியும் என்றால் உன்னாலும் முடியும். நாம் தொடர்பில் இருக்கவும், நம் இயக்கத்தார் மக்களுடனும் என்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக இருக்கவும் சில ஏற்பாடுகள் நடக்கின்றன. அதைப் பற்றிய அறிவிப்பு, வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும்’ என்று எழுதியிருந்தார்.
இதனால், நேரடி அரசியல் என்ட்ரி குறித்த அறிவிப்பை கமல், தனது பிறந்த நாளான நவம்பர் 7-ல் வெளியிடுவார் என்று பரவலாகத் தமிழ் ஊடகங்கள் முதல் தேசிய ஊடகங்கள் வரை செய்தி வெளியானது. இந்தநிலையில், நவம்பர் 7-ல் புதிய கட்சி அறிவிப்பு இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர் 7-ல் இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம். பொது அறிவிப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்’ என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அரசியல் கட்சி குறித்த அறிவிப்புகளுக்கு கமல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்