ஆதார் கார்டுடன் மொபைல் போன் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, `செல்போன் நம்பருடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும், `செல்போன் நம்பருடன் ஆதார் எண்ணை இணைக்க மாட்டேன். வேண்டுமானால் அவர்கள் என் போன் எண்ணைத் துண்டிக்கட்டும்' என்று பேசியுள்ளார். மேலும், `திரிணாமூல் காங்கிரஸ் நவம்பர் 8-ம் தேதியைக் கறுப்பு நாளாக அனுசரிக்கும். அன்று மேற்கு வங்க மாநிலம் முழுவதும் கறுப்புக் கொடி ஏந்தி பேரணிகள் நடத்தப்படும்' என்று தகவல் தெரிவித்துள்ளார்.
நேற்று இந்திய அளவில் 18 எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் திரண்டு, நவம்பர் 8-ம் தேதியைக் கறுப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்துள்ளன. இது குறித்து காங்கிரஸின் குலாம் நபி ஆசாத், திரிணாமூல் காங்கிரஸில் ஓப்ரையன் மற்றும் ஷரத் யாதவ் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஆசாத், `இந்திய அளவில் செயல்படும் 18 கட்சிகள் நேற்று சந்தித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8-ம் தேதியைக் கறுப்பு தினமாக அனுசரிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மன்மோகன் சிங், `இது இந்திய ஜி.டி.பி-யை 2 சதவிகிதம் சரிவடையச் செய்யும்' என்று கணித்தார். அதைப்போலவே நடந்தது.
பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டு இரண்டே வாரத்தில் காஷ்மீர் எல்லையில் இருந்த தீவிரவாதிகளின் கையில் புதிய ரூபாய் நோட்டுகள் இருந்தன. எனவே, அப்போது எதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டதோ அதை எதையுமே அது சாதிக்கவில்லை' என்று குற்றம் சாட்டினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்