மதுரை:
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நலன் மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் டெங்கு ஒழிப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், "தமிழகத்தில் டெங்கு ஒழிப்பு முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது, டெங்கு பாதிப்பதைச் சுகாதாரத்துறையின் பிரச்னையாகக் கருதாமல், முதல்வர் அனைத்துத்துறை பிரச்னையாகக் கருதி ஒன்றிணைத்து செயல்படுத்திவருகிறார். மருத்துவத்தில் மதுரை மாவட்டம் இரண்டாவது தலைநகரமாகச் செயல்பட்டுவருகிறது.
கொசுவின் உற்பத்தி மிகவும் வீரியமானது. அதன் முட்டைகளின் பெருக்கமும் அதிகம் கொசுவோடு போட்டிப் போடுவது மிகப்பெரும் சவால்தான். ஆனாலும், அதிகாரிகள் நினைத்தால் மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்ப டுத்தி டெங்குவை தவிர்க்கலாம். எனவே, நாம் கொசுவைவிட வேகமாகச் செயல்பட வேண்டும். சுகாதாரத்துறை செயலர் சொல்வதுபோல டெங்குவின் தாக்கம் ஏறுவரிசையில் செல்லாமல் தற்போது மிதமாகச் செல்கிறது. எனவே இன்னும் அதிக வேகமாகச் செயல்பட்டு டெங்குவை ஒழிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் .
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்