சென்னை: உயிருடன் உள்ளவர்களின் புகைப்படத்தை கட் அவுட் மற்றும் பேனர்களில் பயன்படுத்தக் கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்ப அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருலோச்சன் சுந்தரி என்பவர் தமது வீட்டுக்கு அருகே அடிக்கடி பேனர், கட்சி விளம்பரம் வைப்பதால் தொல்லை ஏற்படுவதாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 1959-ம் ஆண்டு சட்டத்தை அவ்வப்போது திருத்த வேண்டும் என தெரிவித்துள்ள நீதிமன்றம் கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாமல் கட் அவுட், பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அவை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதா என்பதை கண்காணித்து சுத்தமான சூழ்நிலைகள் நிலவ உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேனரில் உயிருடன் இருப்பவர் புகைப்படம் இடம்பெறக்கூடாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்