பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மகளிரணிச் செயலாளர் மற்றும் ஊடகச் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த ஜெமீலா தற்போது தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெமீலா கூறியிருப்பதாவது, “நான் கடந்த 2 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணிச் செயலாளர் மற்றும் ஊடகச் செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராகக் கட்சிப் பணி செய்து வந்தேன் . பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் என்னை இணைத்துக்கொண்டேன்.
இருப்பினும், எனக்கு கடந்த சில மாதங்களாகக் கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு கருத்து வேறுடுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் தமிழக பா.ஜ.க-வின் கொள்கைகள் எழுத்தளவிலும் செயலளவிலும் மாறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும் உள்ளது. என்னைப்போன்ற கிறிஸ்துவ சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பயணிப்பது கடினம் என்பதை உணர்கிறேன். எனவே இன்று முதல் எனது அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்