வளியன்று வெளியான நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் அரசியல் வசனங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் மருத்துவர்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விஜய் சாடியிருந்தார். மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி, டிஜிட்டல் மயம் ஆகியவற்றின் பாதிப்பும் படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அவர் கூறியிருப்பதாவது, "மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளைச் சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும். மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பா.ஜ.க-வைச் சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் அந்த வசனங்களையும் காட்சிகளையும் நீக்கச் சொல்லி வற்புறுத்துவதும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன். ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான் ஜனநாயகச் சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரம்.
இங்கே எல்லோரையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம். ஓர் அரசியல் கட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வசனங்க ளையும் தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு என்பது எதற்கு இருக்கிறது. சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்யச் சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. தான் நினைத்ததைச் சொல்லும் முழு கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. சமூக அக்கறையுள்ள எங்களுக்கும் அது இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்