சென்னை:
மெர்சல் படத்தயாரிப்பாளர், நடிகர்களை மிரட்டுவதாக பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசை விமர்சிக்கும் காட்சிகளை நீக்குமாறு படத் தயாரிப்பாளரை பாஜகவினர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
விஜய் கிறிஸ்தவர் என்று கூறி மதச்சாயம் பூசும் நடவடிக்கையில் சில பாஜக தலைவர்கள் இறங்கியுள்ளனர். கோயிலுக்கு பதிலாக மருத்துவமனை கட்டலாம் என்று விஜய் கதாப்பாத்திரம் பேசும் காட்சியை வைத்துக்கொண்டு இதுபோன்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகையில், "மத்திய அரசின் தணிக்கைத்துறையே ஆளும் கட்சியின் கலாச்சார காவலர்கள் போன்று வெறி பிடித்து அலையும் நிலையில், அதையும் தாண்டி வந்த படத்திலுள்ள விமர்சனங்களையே தாங்க முடியாமல் படைப்புசுதந்திரம் கருத்து சுதந்திரத்தின் மீது குண்டுவீசுகிறார்கள்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்