திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள சர்க்கரைக் குளத்தில் டெங்கு கொசுக்களை அழிக்கும் கம்பூசியா மீன்களை விட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில் தேரடி வீதி, சர்க்கரை குளம் அருகில் காய்ச்சல் மருத்துவ முகாமை அமைச்சர் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நீலவேம்பு குடிநீர் வழங்கினார். பின்னர் திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளுக்கும் மிதிவண்டிகள் மூலம் வீடுவீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள சர்க்கரைக் குளத்தில் டெங்கு கொசுக்களை அழிக்கும் கம்பூசியா மீன்களை விட்டார். அப்போது, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் தூசி கே.மோகன், வி.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்