பி.ஜே.பி.யினர் எதிர்ப்பதால் மெர்சல் திரைப்படத்தில் வரும் ஜிஎஸ்டி பற்றிய வசனங்களை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறினார்.
தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் அகில இந்திய மாநாடு நவம்பர் 4, 5, 6 தேதிகளில் மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்கான செய்தி யாளர் சந்திப்பில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு பேசும்போது, ''ஒடுக்கப்பட்ட சமூகங்களும், தீண்டாமை ஒழிப்பு இயக்கமும் இணைந்து மதுரையில் மாநாடு நடத்துகிறது. இதில் இட ஒதுக்கீடு தொடர்பாகப் பேசப்படுகிறது. இடஒதுக்கீடு இந்திய சமுதாயத்துக்கு தேவைதான் என்பது பற்றி விவாதிக்கப்படும். கல்வி நிலையங்களின் இன்றைய நிலை என்ன என்பது பற்றியும் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் நிலவும் சாதி மத ஆதிக்கம் பற்றியும் பஞ்சமி நிலங்களின் இன்றைய நிலை, அது யார் கைகளில் உள்ளன என்பது பற்றியும், ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களின் மீதான வன்முறை பற்றியும் ஆணவக்கொலை பற்றியும் இதற்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் மக்களைப் பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்னைகள் பற்றியும் விவாதிக்க உள்ளோம். இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொள்கிறார்'' என்றவர் சில கேள்விகளுக்குப் பதில் கூறினார்.
''பி.ஜே.பி.யினர் எதிர்ப்பதால் மெர்சல் திரைப்படத்தில் வரும் ஜிஎஸ்டி பற்றிய வசனங்களை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களின் கருத்தைதான் திரைப்படங்கள் பிரதிபலிக்கின்றன.
அம்பேத்கர் பெயரை பி.ஜே.பி-யினர் பயன்படுத்துவது, எதிர்ப்பு அரசியல் சக்தியை, புரட்சியின் அடையாளத்தை அழிக்க நினைக்கும் முயற்சிதான். இந்து மதம் இருக்கும் வரை சாதி இருக்கும் என்று சொன்னவர் அம்பேத்கர். அதனால், பி.ஜே.பி-யின் அரசியல் எடுபடாது. இட ஒதுக்கீடு வேண்டாமென்று சில அமைப்புகள் சொல்லுவது அவர்களுடைய தனிப்பட்ட நிலைப்பாடு. நாங்கள் இதை ஒதுக்கீடாகப் பார்க்கவில்லை, பங்கீடாகத்தான் பார்க்கிறோம். எந்த வாய்ப்பும் மறுக்கப்படும். தலித் மக்கள் இருக்கிற வரை பங்கீடு வேண்டும். இதில் இன்னொரு விஷயம், ஏதோ தலித்துகள் மட்டும்தான் இடஒதுக்கீட்டுச் சலுகையை அனுபவிப்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அது தவறானது. அதிக ஒதுக்கீடு உள்ள பிற்பட்ட சாதியினர் யாரும் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. சினிமாவில் மட்டுமல்ல, இந்தியச் சமூகத்தில் அனைத்துத் துறைகளிலும் சாதி நீடித்துக்கொண்டிருக்கிறது'' என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்