img
img

காங்கிரஸ் தலைவர் ஆகிறார் ராகுல் காந்தி..!
வெள்ளி 20 அக்டோபர் 2017 17:34:17

img

நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா வரிசையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் துணைத்தலை வராக இருக்கும் ராகுல் காந்தி இந்த மாத இறுதிக்குள் நியமிக்கப்பட இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள்  தீவிரமாக நடந்து வருகின்றன. அதனை சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

கட்சியை வலுவாக்க நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய, அவரது உடல்நிலை ஒத்துழைக்காததால் ராகுல்காந்திதான் கடந்த இரண்டு வருடங்களாக அரசியல் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் அதன் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பகிரங்கமாகவே அழைப்பு விடுத்து வருகிறார்கள். சமீபத்தில், அமெரிக்கா வுக்கு சென்றிருந்த ராகுல்காந்தி, ''காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகிவிட்டேன்'' என்று பகிரங்கமாக சொல்லி இருந்தார். 

முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட், ''தீபாவளிக்கு பிறகு கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்புக்கு வருவார்'' என்று கூறியுள்ளார். சமீபத்தில் புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட சோனியா காந்தியிடம் கட்சியின் தலைமை மாற்றம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சோனியாகாந்தி, ''இதேக் கேள்வியை பல ஆண்டுகளாகவே கேட்டுக் கொண்டு வருகிறார்கள். அவர் விரைவில் அப்பொறுப்பை ஏற்பார். அதற்கான காலம் கனிந்து விட்டது'' என்று சொன்னார். 

அதாவது வரும் 24, 25 ஆகிய தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக தேர்வு செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க இப்போதே தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல காங்கிரஸ் கட்சியும் தேர்தல் முன்னேற்பாடுகளில்  ஈடுபட வேண்டும் என்று திட்டம் வகுத்து வருகிறது.

ராகுல் சோனியா

கடந்த மூன்று ஆண்டுகளாக இறங்கு முகத்தில் இருந்த காங்கிரஸ்  கட்சியின் செல்வாக்கு இப்போது உயர்ந்து வருகிறது என்கிறார்கள். இதனால், உற்சாகம் அடைந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள்,  நடிகர் வினோத் கன்னா 4 தடவை தொடர்ச்சியாக வெற்றிபெற்ற பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில்  பா.ஜ.க-வை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததை சாதனையாக சொல்கிறார்கள். 'இந்த மகத்தான வெற்றி ராகுல் காந்திக்கு மக்கள் அளித்துள்ள தீபாவளிப் பரிசு’ என்று பாராட்டியுள்ளார் பஞ்சாப் முதல்வர்  அம்ரீந்தர் சிங்.‘‘குர்தாஸ்பூரில் கிடைத்துள்ள வெற்றி காங்கிரசுக்கு கிடைத்துள்ள இன்னிங்ஸ் வெற்றி’’ என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து சொல்லியிருக்கிறார்.

அதேபோல, சமீபத்தில் கேரள மாநிலம், மலப்புரத்தில் உள்ள வேங்கரை சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் காதர் 23,310 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அமித் ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற முக்கிய தலைவர்கள் கேரளாவில் முகாமிட்டும் பா.ஜ.க இங்கு 4 வது இடத்துக்கே தள்ளப்பட்டது. இதையெல்லாம் நல்ல சகுணமாக பார்க்கிறது காங்கிரஸ் கட்சி. 

''மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, வேலையில்லா திண்டாட்டம், மாட்டு இறைச்சிக்கு தடை போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை ராகுல்காந்தி தலைமையில் சந்திக்க இதுதான் சரியான தருணம்'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளார். மேலும் அவர், ''இடைத்தேர்தல் முடிவுகள், காங்கிரஸ்  மீண்டும் எழுச்சி பெறுவதையே காட்டுகிறது. தொடர் தோல்விகளில் இருந்து காங்கிரஸ் மீண்டு வருகிறது. எதிர்வரும் குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் சிறப்பான வெற்றியை பதிவு செய்யும். அதற்கான முன்னோட்டம்தான் இந்த இடைத்தேர்தல் முடிவுகள். காங்கிரஸ் கட்சிக்கு நல்லநேரம் ஆரம்பமாகிவிட்டது'' என்றார். இதனால்தான் இது சரியான தருணம் என்று ராகுல் காந்திக்கு மகுடம் சூட்ட இருக்கிறார்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img