திங்கள் 03, அக்டோபர் 2022  
img
img

சினிமாவின் சில நிமிட காட்சிகளுக்கே தொடை நடுங்கிய பாஜக.
வெள்ளி 20 அக்டோபர் 2017 17:23:46

img

சென்னை:

புதிய இந்தியாவை கொண்டு வருவோம் என சொல்லிச் சொல்லியே மக்களை முட்டுச் சந்தில் நிற்க வைத்து விட்டது பாஜக. இதைத்தான் மெர்சல் படத்தின் காட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. மெர்சல் படத்தின் சில நிமிட காட்சிகளுக்கே தொடை நடுங்கிப் போன பாஜக மக்களின் எதிர்ப்பை முழுமையாக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.

2014-ம் ஆண்டு நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியது. காங்கிரஸின் 10 ஆண்டுகால ஆட்சி மீதான வெறுப்பினால் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர்.

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்ட உடனே பாஜகவின் அதிகார மமதை உச்சத்தை எட்டியது. பாஜகவின் முன்னணி, பின்னணி அமைப்புகள் எல்லாம் தடி எடுத்து தண்டல்காரனாகினார்கள்.

வன்முறையாளர்கள்

விளைவு இதுவரை இந்தியா கண்டிராத அத்தனை வித வன்முறைகளும் அரங்கேறியது. மாட்டிறைச்சி வைத்திருக்கிறார் என்கிற சந்தேகத்தின் பெயரிலேயே திடீர் கலாசார குண்டர்கள் சட்டத்தைக் கையிலெடுக்க அனுமதிக்கப்பட்டது.

மாநில உரிமைகள் பறிப்பு

மாநிலங்களின் உரிமைகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படமால் ஈவிரக்கமற்ற முறையில் ஒற்றை இந்தியாவை உருவாக்குவதில் அப்படி ஒரு மும்முரம் காட்டியது. வழக்கொழிந்த சமஸ்கிருதத்துக்கு வாழ்வளிப்பதில் பிடிவாதம் காட்டியது. இந்தி மொழியை அம்மொழி பேசாத மக்களிடத்தில் திணித்தது.

பணமதிப்பிழப்பு

அதுமட்டுமின்றி தமிழகத்தின் அத்தனை உரிமைகளையும் காவு கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் 400 விவசாயிகளின் பரிதாப மரணத்துக்கு காரணமாகவும் இருந்தது. இதன் உச்சமாக ஒட்டு மொத்தமாக இந்தியாவை நடுத்தெருவில் பிச்சைக்காரர்களைப் போல பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் அலையவிட்டது.

செத்தது புதிய இந்தியா

பணமதிப்பிழப்பின் கொடூர தாக்குதலில் இருந்து மீண்டு மூச்சுவிடுவதற்குள் ஜிஎஸ்டி எனும் மூர்க்கதனமான பேரிடியை திணித்தது. பிறக்க வேண்டிய புதிய இந்தியா செத்தே போய்விட்டது என பொருளாதார வல்லுநர்கள் வெளுத்துக் கட்ட பம்மிக் கொண்டிருக்கிறது பாஜக.

ரணகளத்துக்கு மருந்தாக மெர்சல்

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த மெர்சல் படம், மக்களின் நாடித்துடிப்பை பற்றி பேசியது. ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா மோசடித்தனங்களை சில நிமிடங்களில் பேச.. ரணகளமாக பாதித்த மக்களுக்கு பேராறுதலாகிப் போய்விட்டது.

பம்மிய மெர்சல் குழு

இதனால் பாஜக இப்போது தொடை நடுங்கிப் போய் மிரட்டல் விடுத்திருக்கிறது மெர்சல் படக் குழுவுக்கு. பாஜகவின் நெருக்கடிக்குள்ளாக்கி மத்திய அரசுக்கு எதிரான வசனங்களை நீக்குவதாக மெர்சல் தயாரிப்பாளர் அறிவித்தும் இருக்கிறது. அதேநேரத்தில் பாஜக ஒன்றை மறந்துவிட்டது. மெர்சல் திரைப்படக் குழுவை மிரட்டும் இவர்கள் தங்கள் மீது ஒட்டுமொத்தமாக செம காண்டில் இருக்கும் பல கோடி இந்தியர்களை என்னப் போகிறார்கள்.. எப்படி சமாளிக்கப் போகிறார்கள்.. !?

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
img
கேரளாவில் புது காச்சல்

கோழிக்கோடு, ஏப். 30- கோழிக்கோடு மாவட்டத்தில் பாக்டீரியாவால் மீண்டும் 2

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img