கடந்த சில மாதங்களாக தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் டெங்கு பிரச்னை குறித்தும் அதுகுறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.
விழாவில் பேசிய முதல்வர், 'டெங்கு கொசு ஒழிப்பில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். டெங்கு விஷயத்தை சவாலாக எடுத்துக்கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. எதிக்கட்சியினர் டெங்கு விஷயத்தையும் அரசியலாக்கி வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து அயராது உழைத்து வருகின்றனர்' என்று உரையாற்றினார்.
இந்த விழாவில், முன்னர் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, 'அ.தி.மு.க இருக்கும் வரை தமிழகத்தில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் கலைத் துறையினர் சிலர் வெற்றிடம் இருப்பதாகவும் அதனால், அரசியலுக்கு வந்துவிடலாம் என்றும் நினைக்கின்றனர். அவர்களின் கனவு நிறைவேறாது. எம்.ஜி.ஆர் ஒன்றும் கலைத் துறையில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்று பேசினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்