சென்னை
புதுக்கோட்டையில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரூ.647 கோடியில் திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். விழாவில் துணை முதல் அமைச்சர் உட்பட அமைச்சர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
புதுக்கோட்டை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நாங்கள் அரசியல் பேசவில்லை, உண்மையைதான் பேசுகிறாம். தமிழகத்தில் எத்தனை தேர்தல் வந்தா லும் அதிமுகதான் ஆட்சியமைக்கும். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்ற தனியாக காட்சி தொடங்கி ஆட்சியை பிடித்தவர் எம்ஜிஆர். துரோகிகளின் துணையோடு ஆட்சியை கலைக்கலாம் என்று நினைத்தவர்களின் கனவு நிறைவேறாமல் போய்விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, 'தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை, எனவே கலைத்துறையினருக்கு வாய்ப்பில்லை' என்று பேசியுள்ளார். அவர் மேலும், 'அ.தி.மு.க இருக்கும் வரை தமிழகத்தில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் கலைத் துறையினர் சிலர் வெற்றிடம் இருப்பதாகவும் அதனால், அரசியலுக்கு வந்துவிடலாம் என்றும் நினைக்கின்றனர். அவர்களின் கனவு நிறைவேறாது. எம்.ஜி.ஆர் ஒன்றும் கலைத் துறையில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்'
மத்திய அரசிடம் இணக்கமாக இருப்பதை, மண்டியிட்டோம் என கூறுவதா? என பேசினார்.