சசிகலா தன் கணவரின் நலம் விசாரிக்க 5 நாள் ’பரோலில்’ சென்னை வந்தார். அவரது பரோல் நேற்றோடு முடிந்ததால், நேற்று மீண்டும் சென்னை யிலிருந்து பெங்களூரு சிறைக்குச் சென்றார்.
சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரின் கணவர், நடராஜனுக்கு, கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட நடராஜனுக்கு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக, சசிகலா 15 நாட்கள் பரோல் விடுமுறை கேட்டார். ஆனால் அவருக்கு கடும் நிபந்தனைகளுடன் 5 நாட்கள் மட்டுமே பரோல் கிடைத்தது. பரோலில் வந்த சசிகலா, சென்னை, தி.நகரில் உள்ள, தனது அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டி ல் தங்கினார். அங்கிருந்து, தினமும் மருத்துவமனை சென்று, கணவரை பார்த்து வந்தார்.
சசிகலா பரோலில் வந்த 5 நாட்களில் தனது நெருங்கிய உறவினர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் முக்கியமாக தினகரன் மீது வந்து குவிந்த புகார்களால் அவர் மலைத்துப் போனார். எனினும் தினகரனுக்கு எதிராக பெரிதாக எதுவும் அவரால் செய்துவிட முடிய வில்லை.
கடந்த ஐந்து நாட்களும், தனது தம்பி திவாகரன் மற்றும் அக்காள் மகன் தினகரன் ஆகிய இருவருக்குமிடையே பஞ்சாயத்து செய்வதிலேயே அவர் அதிக நேரம் செலவிட நேர்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.இந்நிலையில், சசிகலாவின் பரோல் விடுமுறை நேற்று நிறைவு பெற்றது. நேற்று மாலை 6 மணிக்குள் அவர் சிறைக்குள் சென்று விட்டார். இதனால் நேற்று காலை சசிகலாவைப் பார்க்க அவரது ஆதரவாளர்கள் தி.நகர் இல்லத்தில் குவிந்தனர்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், கதிர்காமு, செந்தில் பாலாஜி உள்ளிட்ட பிரமுகர்கள் சசிகலாவை சந்தித்துப் பேசினர். பின்னர், சசிகலா கார் மூலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார்.
சசிகலா வருகையால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் நிகழும் என எதிர்பார்த்த நிலையில், சசிகலா வருகையால் எந்த மாற்றமும் வந்து விடாது’ என்று எடப்பாடி தரப்பு கூறியது போல் எதுவும் நடக்கவில்லை. ஆனால்,எடப்படி அமைச்சரவையில் சசிகலா விசுவாசிகள் ஒரு சிலர் இருப்பது அம்பலமாகியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்