நடிகர் கமல் ஹாசன் நடிப்புத் துறையில் இருந்து தற்போது அரசியலில் களம் இறங்க தீவிர ஆலோசனையில் இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தொடங்க பல முக்கிய புள்ளிகள் நிதி வழங்க முன்வந்துள்ளதாக சினிமா உலகின் முக்கிய பிரமுகர் தெரிவித் துள்ளார்.நடிகர் கமல் அரசியல் கட்சி துவங்க போகிறார்என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இது ஒருபுறம் இருக்க, அரசியல் கட்சி துவங்க பணத்திற்கு கமல் என்ன செய்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இந்த கேள்வி குறித்து, சினிமா உலகின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியதாவது:-
கமல் எப்பவும் நேர்மையாக நடக்கவேண்டும் என்று நினைப்பவர். அவர் வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ற வரியை சரியாக கட்டிவிடுவார். கருப்பு பணமாக வாங்க மாட்டார். கமல் இப்போது கடுமையான நிதி பிரச்சினையில்தான் இருக்கிறார். தனிக்கட்சி ஆரம்பித்தால் ஏற்படும் பண நெருக்கடிகள் பற்றி கமல் அறிவார்.
கமல் கட்சி தொடங்கினால், மூன்றெழுத்து பெயர் கொண்ட கிறிஸ்டின் தொழிலதிபர் ஒருவர் உதவுவதாக கூறியுள்ளார்.தொழிலில் நேர்மையாக இருக்கும் அந்த நபரை கமலுக்கு பிடித்துவிட்டது. அதுமட்டும் இல்லாமல், இன்னும் சில தொழில் அதிபர்கள் அட்வான்ஸ் தொகையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மிக விரைவில் கமல் நல்ல முடிவை எடுப்பார் என நாங்கள் நம்புகிறோம் என்று அந்த பிரமுகர் கூறியுள்ளார்.
Read More: Malaysia Nanban News Paper on 10.10.2017
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்