பெங்களூரு: பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா வீட்டில் இருந்து கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று வர மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை பார்க்க சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கொடுத்துள்ளது கர்நாடகா சிறைத்துறை. இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் சசிகலா.
5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டாலும் சசிகலாவுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது வீட்டில் இருந்து நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு மட்டும் சென்று வரவேண்டும். மருத்துவமனையில் இருந்து வீட்டைத் தவிர வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது. தாமாகவே, எந்த அரசியல்வாதியையும் அழைத்து சந்திக்கக்கூடாது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவமனையில் இருக்கலாம். பொதுக் கூட்டம், பொது நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது; பத்திரிகைகளுக்கு பேட்டி தரவும் கூடாது; அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவும் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்