சென்னை,
நடிகர் கமல்ஹாசன் அரசியல் குறித்தும் , அரசியல்வாதிகள் குறித்தும் அடிக்கடி டுவிட்டரில் கருத்து வெளியிட்டு வருகிறார். குறிப்பாக தமிழக அரசு மீது பலவேறு குற்றசாட்டுகளை அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். சமீபத்தில் கமல்ஹாசன் விடுத்த டுவிட்டரில், “டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியா விட்டால் இந்த விஷயத்தில் இருந்து தமிழக அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்“ என் அவர் கூறி இருந்தார்.
இந்த நிலையில் சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி மாணவர் பார்கவ் டெங்கு காய்ச்சல் பாதித்து நேற்று உயிரிழந்தார். இது நடிகர் கமல்ஹாசனை ஆவேசப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் டுவிட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது, கட்டுப்படுத்துங்கள் என்று நான் பல தடவை கூறினேன். ஆனால் அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது. டெங்கு காய்ச்சலின் கோர முகத்துக்கு தற்போது கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி மாணவர் பார்கவ் உயிரை கொடுத்துள்ளார். டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு இதற்கு பொறுப்பு ஏற்று உடனே பதவி விலக வேண்டும்.
செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்
— Kamal Haasan (@ikamalhaasan) September 24, 2017
அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 24, 2017
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்