img
img

அமோக விற்பனையில் ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி...
புதன் 14 செப்டம்பர் 2016 14:16:44

img

கபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி என்ற பெயரில் கடந்த சில தினங்களாக அமோகமாக விற்பனையாகிவரும் சிடியை தடுக்கக் கோரி போலீசில் புகார் செய்யப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. பிரகாஷ் ராஜ் ஜோடியாக 'தோனி படத்தில் அறிமுகமாகி, ரஜினியுடன் 'கபாலி' படத்தில் நடித்து உலகளவில் புகழ் பெற்றவர் ராதிகா ஆப்தே. ஆனால் அதற்கு முன்பே அவர் ஆபாசக் காட்சிகளில் தோன்றி பரபரப்பைக் கிளப்பியவர். சில மாதங்களுக்கு முன்பு ஆடையில்லாமல் அவர் குளிப்பது போன்ற படங்கள் வந்தன. ஆடையை விலக்கி அந்தரங்கத்தைக் காட்டுவதுபோல் இன்னொரு ஆபாசக் காட்சி வெளியானது. அடுத்து ஹாலிவுட் படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சிகளும் வெளிவந்தன. இவை எதையும் அவர் மறுக்கவில்லை. கதைக்கு தேவைப்பட்டதால் அந்த காட்சியில் நடித்தேன் என்றும் இந்தியாவில் அதை நீக்கிவிட்டுத்தான் படத்தை திரையிடுவார்கள் என்றும் அவர் கூறினார். அந்த சர்ச்சை அடங்கும் முன் அனுராக் கஷ்யப் இயக்கிய குறும்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்த காட்சிகள் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்தது. 20 நிமிடங்கள் அந்த செக்ஸ் படம் ஓடியது. இது படக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரோ இந்த காட்சிகளை திருடி வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனுராக் காஷ்யப் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் ‘பார்ச்டு' என்ற படத்தில் அவர் நடித்துள்ள இன்னொரு செக்ஸ் காட்சியும் இணையதளங்களில் பரவியது. இதனை பலர் பதிவிறக்கம் செய்து பார்த்தனர். வாட்ஸ் ஆப் குழுக்களில் தொடர்ந்து பகிரப்பட்டது. இந்த செக்ஸ், நிர்வாணக் காட்சிகள் அனைத்தையும் தொகுத்து கபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் படம் என்ற பெயரில் சி.டி. மற்றும் டி.வி.டிக்களாக மும்பை, சென்னையில் பலர் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த சி.டி.க்கள் அமோகமாக விற்பனையாவதாக கூறப்படுகிறது இதனால் ராதிகா ஆப்தே அதிர்ச்சி (??) அடைந்த ராதிகா, தனது பெயரில் போலியாக அந்த செக்ஸ் சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறாராம். நடித்த போது இல்லாத அதிர்ச்சி, சிடியாக விற்பனையில் வந்திருக்கிறது! .

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img