காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் மத்திய அரசிடம் அதிரடி யாக பல கேள்விகளைக் கேட்டனர். 'காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதற்கு பின்னர், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இந்த வழக்கு, தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. இதனால், தமிழக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று வாதாடினார். அதன்பின்னர், உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம், "காவிரி விவகாரத்தில் தனக்குள்ள பொறுப்பை மத்திய அரசு தட்டிகழிக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாகக் கூறிவிட்டு, பின்னர் பின்வாங்கியது ஏன்? " என்று கடுமையான கேள்விகளை முன்வைத்தது. மத்திய அரசு விரை வில் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்