img
img

நான் நலமாக இருக்கிறேன், ஆனால்...’ - தினகரனிடம் கதறிய சசிகலா
வியாழன் 03 ஆகஸ்ட் 2017 15:33:41

img

சிறையில் சசிகலாவைச் சந்தித்த தினகரனிடம், 'நான் நலமாக இருக்கிறேன், ஆனால் சிறை நெருக்கடிகளைச் சமாளிக்க முடியவில்லை' என்று கண்ணீர் மல்கக் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திக்க, நேற்று தினகரன் சென்றார். ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பிறகே அவருக்கு சசிகலாவைச் சந் திக்க அனுமதி கிடைத்தது. சீருடையில் வந்த சசிகலாவிடம் பேசியிருக்கிறார் தினகரன். சிறையில் நடக்கும் விவரங்களை சசிகலா, கண்ணீருடன் சொல் லியிருக்கிறார். தினகரன், ஆறுதலாகச் சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு வெளியில் வந்திருக்கிறார். இதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில், 'கட்சித் தலைமை அலுவலகத்துக்கு நான் செல்வதைத் தடுக்க முடியாது. எனக்கு 122 எம்.எல்.ஏ-க்களின் ஆத ரவு உள்ளது. சசிகலா, சிறையில் நலமாக இருக்கிறார்' என்று கூறினார் தினகரன். ஆனால், சிறையில் சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் நெருக்கடிகளால் அவர் சோர்ந்துபோய் உள்ளாராம். விரைவில் சிறையிலிருந்து வெளியில் வர வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலா இருக்கிறார் என்கின்றன, உள்விவர வட்டாரங்கள். இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "சசிகலாவைச் சந்திக்க அனுமதி கேட்டு எங்களிடம் விண்ணப்பித்திருந்தார். சிறை விதிமுறைக ளுக்குட்பட்டு, நேற்று அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சசிகலாவும் தினகரனும் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினர். ஆனால், அவர்கள் என்ன பேசி னார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. தினகரனிடம் பேசும்போது, சசிகலா அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டார். சிறையில் சசிகலாவுக்கு எந்தவித நெருக் கடியும் கொடுக்கப்படவில்லை. சக கைதிகளைப் போலவே அவர் நடத்தப்படுகிறார். சீராய்வு மனு விசாரணையை எதிர்பார்த்து அவர் காத்திருக்கிறார். அதில் சாதகமான உத்தரவு கிடைக்கும் என்று நம்புகிறார். மேலும், இளவரசியுடன் மட்டும் பேசும் அவர், புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வமாக இருக் கிறார்" என்றனர். சசிகலாவைச் சந்தித்துவிட்டு வந்த தினகரன், அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் அவரின் ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால், ஆதரவாளர்களுக்கு தினகரன் தரப்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 5-ம் தேதி, அவர் கட்சி அலுவலகத்துக்குச் செல்லும் தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், தேனி மாவட்டத்தில் ஆதரவாளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இதனால், அவர் கட்சி அலுவலகத்துக்கு வருவாரா அல்லது தேனி மாவட்டத்துக்குச் செல்வாரா என்ற கேள்வி ஆதரவாளர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. சசிகலாவைச் சந்தித்த பிறகு, தினகரன் தன்னுடைய தீவிர ஆதரவாளர்களிடம் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, 'சசிகலாவுக்கு சிறையில் கொடுக்கப்படும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. எந்நேரமும் சிறைக்காவலர்களின் கண்காணிப்பில் சசிகலா இருப்பதால், அவரால் நிம் மதியாக இருக்க முடியவில்லை. சிறையில் கொடுக்கப்படும் உணவையும் சரியாக சாப்பிடமுடியவில்லை' என்று சொல்லும்போது, தினகரனின் குரல் உடைந்திருந்தது. 'ஏற்கெனவே, உடல்நலம் பாதிப்பால் சிரமப்பட்டு வரும் அவர், உடலளவிலும் மனதளவிலும் சோர்ந்துபோய் இருக்கிறார். இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். கட்சி விவகாரம் தொடர்பாக சசிகலாவிடம் ஆலோசித்தபோது சில அறிவுரைகளைக் கூறியிருக்கிறார். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியாலும் ஓ. பன்னீர்செல்வத்தாலும் கொடுக்கப்படும் நெருக்கடிகளைச் சமாளிக்க, 'சமரசமாகப் பேசி முடிவு எடு' என்று சொல்லியிருக்கிறார் சசிகலா. கட்சித் தலைமை அலுவலகத்துக்குச் சென்றால், அதையே காரணம்காட்டி உன்மீது நடவடிக்கை எடுப்பார்கள். யோசித்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். மேலும், நம்முடைய ஆதரவாளர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசி, ஒரு முடிவை எடு. அடுத்து, தமி ழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை வெற்றியோடு முடித்துவிட்டு வா. நமக்குக் கட்சியில் ஆதரவு இருப்பதாலேயே எடப்பாடி பழனிசாமியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஓ.பன்னீர்செல்வம், நம் குடும்பத்தினரைக் கட்சி யிலிருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்தபோதும், எடப்பாடி பழனிசாமி அமைதியாகவே இருப்பதற்கு அதுதான் காரணம். நம்முடைய ஆதர வாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலேயே எல்லா பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்' என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் சசிகலா. இந்தத் தகவலை, தன் ஆதரவாளர்களிடம் பகிர்ந்துள்ளார் தினகரன். தற்போதைய சூழ்நிலையில், கட்சித் தலைமை அலுவலகத்துக்குச் செல்வதைவிட, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்துக்குத் தயாராகிவிட்டாராம். தினகரனின் இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி தரப்பும் வரவேற்றுள்ளதாம். இப் போதைக்கு, ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கைகோர்க்க வாய்ப்பில்லை என்கின்றன கட்சியின் உள்விவர வட்டாரங்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img