ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது' என்று ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். ஃபெப்சி அமைப்பினருடன் வேலை செய்ய மாட்டோம்' என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவை திரும்பப் பெற வேண்டும், ஒப்புக்கொண்ட சம்பளத் தைக் குறைக்கக் கூடாது, பொது விதிகளை மதிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை வைத்து ஃபெப்சி தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1- ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, நடிகர் ரஜினிகாந்தை ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட ஃபெப்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினார். இதையடுத்து, ரஜினி, இருதரப்புக்கும் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே.செல்வமணி, ''ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்படுகிறது. நாளை முதல் படப்பிடிப்பில் ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை செய்வர். சம்பள பிரச்னை தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது'' என்று கூறினார். 'ரஜினி, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று ஏகமனதாக வேலை நிறுத்தத்தை கைவிடுகிறோம்' என்று ஃபெப்சி தொழி லாளர்கள் கூறியுள்ளனர். ஃபெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் கிட்டத்தட்ட 40 தமிழ் திரைப்படங்களின் படப்படிப்பு நடத்து முடியாமல் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்