வருமான வரித்துறை உத்தரவின்பேரில் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகளை முடக்கிய புதுக்கோட்டை நில பதிவாளர் சசிகலா அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ஆளும்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, புதுக்கோட்டையில் உள்ள வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளிலும் வருமான வரித் துறையில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப் பற்றினர். மேலும் விஜயபாஸ்கரிடம் பல தடவை வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அண்மையில் நடத்தப்பட்ட விசாரணையில் விஜய பாஸ்கரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை வருமான வரித்துறையினர் கேட்டனர். இந்நிலையில், கடந்த 28-ம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள், இந்தப் பிரச்னை தொடர்பான அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தந்தை சின்னதம்பி உள்ளிட்டோரின் பெயரில் உள்ள சொத்துகளை முடக்கி வைத்திட புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் சசிகலாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதை யடுத்து, மாவட்ட பதிவாளர் சசிகலா, இதுகுறித்து மாவட்ட வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். மேலும், அமைச் சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சொத்துகள் முடக்கி வைக்கக் காலதாமதம் ஆன நிலையில், அடுத்தடுத்து வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்தும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை, அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்துக் சொந்தமான 100 ஏக்கர் நிலங்கள், குவாரிகள் உள்ளிட்ட சொத்துகள் முடக்கம் செய் யப்பட்டது. இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டப் பதிவாளர் சசிகலா, மற்றும் விராலிமலை சார்பதிவாளர் உள்ளிட்டோர் நேற்று பணியிட மாற் றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அது உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை சசிகலா, விருதுநகர் மாவட்டத்துக்குப் பணி யிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரின் சொத்துகளை முடக்கிய அதிகாரி 12 மணி நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, விஜயபாஸ்கருக்குச் சொந்தமான திருவேங்கைவாசல் குவாரி வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இந்தச் சொத்துகளை சீல்வைக்க திருச்சியில் இருந்து அதிகாரிகள் வருவதாக கூறப்பட்டது. இதனால் அந்தப் பகுதிகள் பரபரப்பாக இருந்தது. நள்ளிரவு வரை பரபரப்பு தொடர்ந்தது. ஆனால் சீல் வைக்கும் அதிகாரிகள் வரவே இல்லை. இது குறித்து விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கூறுகையில், "ஒரு பிரச்னை எழுந்தால், அந்தப் பிரச்னை முடியும்வரை, பிரச்னைக்குரிய சொத்தை விற்று விடவோ, தானமாக யாருக்காவது மாற்றிக்கொடுக்கவோ கூடாது என்பதற்காக அந்தச் சொத்துகளை முடக்கி வைப்பது என்பது சட்டநடைமுறை. அதன் படிதான், இந்த விவகாரத்திலும் நடக்கிறது. இதைப் பெரிதாக்குகிறார்கள். நீட் தேர்வு விவகாரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான அமைச் சர்கள், நல்ல முடிவோடு, திரும்பி வர டெல்லியில் முகாமிட்டுள்ளார்கள். தொடர்ந்து சில நாளில் நல்ல பதில் கிடைக்கும் எனக் கூறப்படும் நிலையில், இந்த விசயத்தைத் திசை திருப்புவதற்காக இப்படி சாதாரண விசயத்தை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்" என்று தெரிவித்தனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்